புதிய ஓய்வூதியத் திட்டம்! இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை

விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை விவசாய மற்றும் கமநல காப்புறுதிச்சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கு இன்று முதல் விவசாயிகள் பங்களிப்பை வழங்கத் தொடங்குவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தச் சீர்திருத்தமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தீர்மானம்

இதேவேளை விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தீர்மானித்திருந்தது. அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கான இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சபையின் தலைவர் மத்தும பண்டார வீரசேகர கடந்த கிழமை தெரிவித்திருந்தார்.

இதேவேளை 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறையானது வினைத்திறனாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!