பனிப்பாறையில் மோதுண்ட பின்னரே டைட்டானிக் கப்பலை நான் பொறுப்பேற்றேன்! ஜனாதிபதி

பனிப்பாறையில் மோதுண்டதன் பின்னரே தாம் டைட்டானிக் கப்பலை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மோதுண்ட பனிப் பாறையிலிருந்து கப்பலை மீட்டு எடுக்கவே முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற்றுக் கொள்ள முடியுமாயின் சாதகமான நிலைமை உருவாகும்.முதலில் அந்நிய செலாவணியை பாதுகாத்துக் கொள்வதனை செய்ய வேண்டும். இறக்குமதியை வரையறுத்து எரிபொருள், மருந்து பொருள் மற்றும் மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

ஆரம்பத்தில் இந்த நடவடிக்கை சாதகமாக இல்லாத போதிலும் தற்பொழுது சாதக மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. எதிர்வரும் இரண்டாண்டுகளுக்கு இந்தப் பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்ய நேரிட்டுள்ளது.விவசாயம் உள்ளிட்ட பல விடயங்களில் வரி அறவீடு செய்ய நேரிட்டது. வேறு மாற்று வழிகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!