கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்! ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் படையெடுப்பு

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொழும்பின் முக்கிய பகுதிகளில் வீதித்தடைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சில வீதிகளை முடக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  மேலும், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர். 

ஜே.வி.பியின் நிலைப்பாடு

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான இன்றைய மக்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி யாரால் எதற்காக ஏற்பாடு செய்யப்படுகின்றது என்பது தெரியவில்லை என கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். நாட்டை வெற்றிகொள்ளச் செய்யும் நோக்கில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த போராட்டம் பற்றி தமக்கு எவ்வித புரிதலும் கிடையாது எனவும் இதனால் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை அணி திரட்டி வெற்றிகரமான மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களிடம் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!