ரணில் ஒரு நரி – அவர் அவிழ்த்து விட்ட கரடி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி. ஆனால் அவர் ஓராண்டுக்குள்ளே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என கரடி ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
    
“ இந்த ஏமாற்றுக்குள்ளே தொடர்ந்து நாங்கள் ஏமாற்றப்படுவோமா?என்ற கேள்வி எழுகிறது.தமிழ் மக்களை பொறுத்தளவிலே இனி மேல் தொடர்ந்தும் இலங்கைக்கு ஒரு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்ப்பதிலே அர்த்தமில்லை .சர்வதேச நோக்கிலே எங்களுடைய பார்வையிலே தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.எங்களுடைய 3 தமிழ் தேசிய அணிகளும் சர்வதேச சமூகத்தை நோக்கி ஒரு பொதுசன வாக்கெடுப்பினை தொடர்ந்து வலியுறுத்துவதன் ஊடாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த பிரச்சனைகளுக்கு ஆதரவு கொடுக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே இந்தியாவின் யோசனையாக ,13 திருத்தம் அமைந்துள்ளது.இந்த திருத்தம் எங்களுக்கான தீர்வு என்று வற்புறுத்தக் கூடாது என இந்தியாவிடம் கூறிக்கொள்கிறோம்.வடக்கு,கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும் என்று அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுங்கள். வீட்டிலே ஒவ்வொருவரினதும் பேச்சு உரிமை 6 ஆவது திருத்தத்தின் ஊடாக மறுக்கப்படுகின்றது.13 ஆவது திருத்தம் என்று இருக்கிறீர்கள்.ஏன் 6 ஆவது திருத்தத்தினை மறந்து விட்டீர்கள் என்ற கேள்வி இருக்கின்றது.

மாவீரர் வாரம் நவம்பர் 21 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரை அனுஷ்ட்டிக்கப்பட உள்ளது.நாங்கள் என்ன பிரகடனத்தை சொல்ல போகிறோம் என்ற விடயம் இருக்க போகிறது. மக்கள் ஒரு உறுதியான எடுக்க வேண்டும்.புலிகளின் தாகம் ,தமிழீழ தாயகம் என்றே தங்களின் உயிர்களை தியாகம் செய்தார்கள் .எனவே சுயநிர்ணய அடிப்படையில் பொதுசன வாக்கெடுப்பினை வலியுறுத்துகிறோம் என்ற கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்.

செத்த பாம்பினை திருப்ப அடித்துக்கொண்டிருப்பது போல் சமஷ்டி என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.இந்த மாவீரர் வாரத்தினை தமிழீழம் எங்கும் மிக எழுச்சியாக அனைவரும் அனுஷ்டிக்க முன் வர வேண்டும்.என்ற கோரிக்கையினை முன் வைக்கிறோம்.புலம்பெயர் தேசங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கார்த்திகை 27 ஆம் மாவீரர் தினத்தினை மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்க முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!