உயிர் பிழைத்த டைட்டானிக் ரோஸ் எகிப்துக்கு காதல் பயணம் சென்றுள்ளார்-வீரசுமன வீரசிங்க

நாங்கள் அனைவரும் இணைந்து கட்டிய டைட்டானிக் கப்பல் தவறான கெப்டனின் கைக்கு சென்றதால், அந்த கெப்டன் அதீதமான நம்பிக்கையில் சென்று கப்பலை பனிப்பாறையில் மோதினார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் கப்பலில் ஜெக்கிற்கும் ரோஸூக்கும் இடையில் இருந்த காதல் தொடர்பை போல், மொட்டுக்கட்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலான காதல் தொடர்பின் பிரதிபலனாக மொட்டுக்கட்சி அழிந்து ரோஸ் மாத்திரம் உயிர் தப்பினார்.

உயிர் பிழைத்த ரோஸ் தற்போது காதல் பயணமாக எகிப்துக்கு சென்றுள்ளார். அரசாங்கத்தின் அழிவும், பொருளாதாரத்தின் அழிவும் இலங்கை தாயின் அழிவும் சரியாக டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த அழிவை போன்றது எனவும் வீரசுமன வீரசிங்க கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவம் முதலாது சம்பவம் அல்ல. இதற்கு முன்னரும் அவுஸ்திரேலியாவுக்கு சென்று வேலி தாண்டிய அமைச்சர்களும் இருக்கின்றனர். இது நாடு ஒழுக்கமின்றி செல்லும் பயணத்தின் முடிவு எனவும் வீரசுமன வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!