இலங்கையில் குரங்கம்மை நோய்த் தொற்று! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் குரங்கம்மை நோய்த் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

இந்த நிலையில் மக்கள் மத்தியில் குரங்கம்மை நோய் தொடர்பான விழிப்புணர்வு எந்தளவில் உள்ளது என்பதை அறிய எமது செய்திப் பிரிவு களஆய்வொன்றை செய்திருந்தது. இதன்போது கொழும்பின் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!