ஏலத்திற்கு வரும் பிரெஞ்சு ராணியின் 250 ஆண்டு பழமையான பொருட்கள்!

பிரெஞ்சு ராணி மேரி அன்டோனெட்டின் பொருட்கள் பாரிசில் ஏலத்திற்கு செல்ல உள்ளன. சீன கலாச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டு, 1770ஆம் ஆண்டு பிரான்சின் ராணியாக இருந்த மேரி அன்டோனெட்டிற்காக மேசை பெட்டகம் மற்றும் நாற்காலி உருவாக்கப்பட்டது. இதுதான் அவரது மரண தண்டனைக்கு முன்பாக ஆர்டர் செய்யப்பட்ட கடைசி மரச்சாமான்கள் ஆகும். இவை வரும் 22ஆம் திகதி பாரிஸில் ஏலத்திற்கு வர உள்ளன.
    
250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பொருட்கள் முறையே 800,000 முதல் 1.2 மில்லியன் யூரோக்கள் மற்றும் 100,000 முதல் 200,000 யூரோக்கள் வரை ஏலத்தில் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த ஏலத்தில், ராணியின் வைர வளையல்கள் 8.18 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டன.

கிறிஸ்ட்டியின் பிரான்ஸ் துணைத்தலைவர் சைமன் டி மோனிகால்ட் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த பொருட்கள் எப்போதுமே முக்கியமானவை மற்றும் பல நூற்றாண்டுகளாக கருதப்படுகின்றன. எனவே, அவற்றின் தோற்றம் மற்றும் அரச பரிமாணத்தை மனதில் கொள்ளாமல் கூட, அவை போற்றப்பட்டு விரும்பப்பட்டன’ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!