தனது வீட்டிற்கே தீ வைத்துக்கொண்ட பிரித்தானிய பெண்: சொன்ன வினோத காரணம்!

பிரித்தானியாவில் வேண்டுமென்றே தனது வீட்டிற்கு தீ வைத்த பெண்ணொருவர், சிசிடிவி காட்சியால் சிக்கியதால் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார். வேல்ஸின் நியூபோர்ட்டைச் சேர்ந்த ஷபீனா கனோம் (27) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் வசித்திருந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டனர்.
    
மேலும், ஷபீனா அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகள் மூலம் ஷபீனா தான் தீ விபத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.அவர் வேண்டுமென்றே தனது சோஃபாவில் உள்ள பஞ்சுகளைக் கொண்டு தீயை மூட்டியுள்ளார். பின்னர் தீ விபத்தில் சிக்கியது போல் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.

நீதிமன்றத்தில் PTSD நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் Personality disorder பிரச்சனை இருப்பதாகவும் கூறிய ஷபீனா, தீ விபத்தினால் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும் மது மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் குடியிருப்பு பகுதியில் தீயை ஏற்படுத்தி, மக்களுக்கு ஆபத்தை விளைவித்த குற்றத்திற்காக ஷபீனாவுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!