கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

இலங்கையின் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் சந்திரபால லியனகே மற்றும் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை (22.11.2022) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிதியில் இருந்து 990,000 ரூபாவை பயன்படுத்தியமை மற்றும் ஜிஐ ரக 600 குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மூன்று பிரதிவாதிகளும் 20ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், தலா 500,000 ரூபா சொந்தப்பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன், வழக்கு விசாரணை முடியும் வரை வெளிநாடு செல்வதைத் தடுத்து அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை அவர்களின் கைரேகையை பதிவு செய்யுமாறும் உத்தரவிட்ட நீதிமன்ற நீதிபதி, வழக்கை 2023 பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!