அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், வரிச்சுமை அதிகரிப்பு மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நேற்றய தினமும், இன்றய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜே.வி.பி. கட்சியின் தொழிற்சங்கமான அனைத்து நிறுவனங்கள், ஊழியர் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. கொழும்பில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றது.இந்நிலையில் பன்னிப்பிட்டிய சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

மாகும்புற பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேரளவில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று பொரளையில் நடைபெற்றுள்ளது. இதில் பெருந்திரளான ஆசிரியர்களும் தொழிற்சங்கப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!