பிரித்தானியாவில் அதிகரிக்கும் சிறார் இறப்பு எண்ணிக்கை!

பிரித்தானிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், Strep A பாதிப்பால் இதுவரை 15 சிறார்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், வெளியான எண்ணிக்கையை விட அதிகமான சிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
    
பிரித்தானிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் 12 முதல் நவம்பர் 28 வரையில் 15 சிறார்கள் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பெல்ஃபாஸ்ட், வடக்கு அயர்லாந்தில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. வேல்ஸ் பகுதியில் ஒரு குழந்தை இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Streptococcus pyogenes எனப்படும் Strep A தொற்றானது மிக லேசான அறிகுறிகளுடன் அடையாளம் காணப்படுகிறது. தொண்டை வலி, தோல் தொற்றுகள் என அடையாளம் காணப்பட்டு,
ஆபத்தில் முடியலாம் மருத்துவர்கள் எச்சரிக்கை பின்னர் ஸ்கார்லெட் காய்ச்சலும் இருக்கும் எனவும், துரிதமாக செயல்பட்டு, சிகிச்சை முன்னெடுக்க தவறினால் ஆபத்தில் முடியலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2017 மற்றும் 2018 காலகட்டத்தில் Strep A தொற்று பாதிப்பால் பிரித்தானியாவில் 27 சிறார்கள் உட்பட மொத்தம் 355 பேர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், 431 பேர்களுக்கு அப்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளனர்.

Strep A தொற்றால் மொத்தம் 60 பேர்கள் இறப்பு ஆனால் தற்போது இதுவரை 169 சிறார்களுக்கு Strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த முறையைவிட தற்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவும், செப்டம்பர் 12 க்கு பின்னர், Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தம் 60 பேர்கள் இறந்துள்ளதாகவும் இதில் 15 சிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 13 சிறார்கள் 18 வயதுக்கு உட்பட்டவர் ஆவார்கள். Strep A தொற்றின் அறிகுறி தொடர்பில் பல பெற்றோர்களும் தற்போது தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருவதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். காய்ச்சல் 38°C மேல் இருக்கும் எனவும், கடுமையான உடல் வலி, தொண்டை வலி மற்றும் தொடக்க அறிகுறிகள் காணப்பட்ட 12ல் இருந்து 48 மணி நேரத்தில் உடல் முழுவதும் சிறாய்ப்புகள் அல்லது தடிப்புகள் காணப்படும் எனவும் நாக்கு வெள்ளை நிறத்திற்கு மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!