பிரான்சில் கலவரமாக மாறிய வெற்றி கொண்டாட்டம்!

பாரிஸ் நகரில் கால்பந்து ரசிகர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் இறுதியில் ஒட்டுமொத்த நகரமும் பற்றியெரியும் அளவுக்கு கலவரத்தில் முடிந்துள்ளது. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளும் மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணிகளும் காலிறுதியில் மோதின. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் அணிகள் வெற்றிவாய்ப்பை இழந்து வெளியேறின.
    
கத்தாரில் பிரான்ஸ்- இங்கிலாந்து போட்டி முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் சுமார் 20,000 மக்கள் பாரிஸ் தெருக்களில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு நுழைந்த கொண்டாட்டத்தில் மக்கள் மன நிலை இருந்தாலும், திடீரென்று பொலிசாருடன் மோதல் ஏற்பட்டதும், வெற்றிக்கொண்டாட்டம் கலவரமாக மாறியது.

இதனையடுத்து பொலிசார் கண்ணீர் புகையை மக்கள் மீது செலுத்தினர். மட்டுமின்றி கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி சுமார் 74 பேர்கள் கைதாகியுள்ளனர். இதனிடையே, மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் இடையேயான போட்டியின் பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புகழ்பெற்ற பாரிசியன் அவென்யூவில் திரண்டனர்.

அடுத்த சில மணி நேரங்களில் பிரான்ஸ் அணியும் வெற்றிபெற, மக்கள் திரளாக அப்பகுதியில் கூடியுள்ளனர். மேலும், கடைகளை அடித்து நொறுக்கியுள்ளதுடன், பொலிசாருடனும் மக்கள் மோதலில் ஈடுபட்டனர். பொலிசார் மீது கற்கள் வீசியதாகவும் கூறப்படுகிறது. பல எண்ணிக்கையிலான மோட்டார்சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனையடுத்து, திரளனான பொலிசார் குவிக்கப்பட்டதுடன், தெருக்களில் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!