ஒரு தீவு நாடாக இலங்கை சகல நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

ஒரு தீவு நாடு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளை பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக்கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசுகளுக்கு இடையில் ஏற்படும் மோதல்களின் போது ஒரு அணியாக பிரியாது, அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுவதன் மூலம்  இலங்கையை உலகில் நல்ல நிலைக்கு உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தியத்தலாவ இராணுவ கல்வியற் கல்லூரியின் 97வது பயிற்சியை முடித்து வெளியேறும் கெடட் உத்தியோகஸ்தர்களின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!