இலங்கையில் அதிகரித்து வரும் உணவு நெருக்கடி!

அரசியல் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 2022 இல் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
    
இலங்கை அதிகரித்து வரும் உணவு நெருக்கடியை துரிதமாக எதிர்கொள்கின்றது நான்கில் ஒருவர் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 2022 முதல் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குடும்பங்களை சேர்ந்த 244 330 பேருக்கு உதவி வழங்கியுள்ளது. இலங்கை முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது அரசியல் சமூக குழப்பநிலை காரணமாக இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானவர்கள் தங்கள் முக்கிய வருமானத்திற்காக விவசாயத்தை எதிர்பார்த்துள்ளனர். தொடரும் பல்பரிமாண நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் தேசிய உணவு முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரங்கள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இன்மையினால் 2021 முதல் விவசாயம் வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது- கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளிற்கு உணவு வழங்க முடியாத நிலையில் உள்ளனர்,

அடிப்படை கால்நடை மருந்துகளை வழங்க முடியாத நிலையில் உள்ளனர்,மீனவர்கள் தங்கள் இயந்திரபடகுகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக உள்ளுர் சந்தைகளில் உணவு விநியோகம் குறைவடைகின்றது உணவு பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நான்கில் ஒரு குடும்பங்கள் வருமான குறைப்பை எதிர்கொண்டுள்ளன, இரண்டில் ஒரு குடும்பம் வருமானம் இன்மை அல்லது உணவின்மையை சமாளிப்பதற்காக எதிர்மறையான நடவடிக்கைகளில் தங்கியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!