ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானமா?- வரி கட்டத் தயாராகுங்கள்!

ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அரசாங்க நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதனடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை.

சம்பளம் ரூ.150,000 என்றால் வரி ரூ. 3500
சம்பளம் ரூ.200,000 என்றால் வரி ரூ. 10,500
சம்பளம் ரூ.250,000 என்றால் வரி ரூ. 21,000
சம்பளம் ரூ.300,000 என்றால் வரி ரூ. 35,000
சம்பளம் ரூ.350,000 என்றால் வரி ரூ. 52,500
சம்பளம் ரூ.400,000 என்றால் வரி ரூ. 70,500
சம்பளம் ரூ.10 லட்சம் என்றால் வரி ரூ. 286,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!