உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் இந்தியாவில் கைது

இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் முக்கியதாரியான சஹ்ரான் ஹாசிமும் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் இருவரை இந்திய புலனாய்வுப்பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். அக்டோபர் 23 ஆம் திகதி, தமிழகம்- கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரையே இந்திய புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி என்பவரையே இந்திய புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் 250 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் தலைவரான ஹ்ரான் பின் ஹாஷிமுடன் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர் ஷேக் ஹிதாயத்துல்லா தொடர்பில் இருந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரும் தமிழகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அங்கு அவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டதாக குற்றம் விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தொடர்புகள் தொடர்பாக, இந்திய தேசிய புலனாய்வு பிரிவால், விசாரிக்கப்பட்ட ஜமீஷா முபீன் என்பவர், கோயம்புத்தூர் உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் திகதி காலை, தாம் ஓட்டிச் சென்ற காரில் இருந்த காரில் இருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் சந்தேகத்திற்கிடமான முறையில் கருகி உயிரிழந்தார். இறந்தவர் இந்த வெடிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!