சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை! – என்கிறார் ஞானசார தேரர்

நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும். சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும். அதில் எமக்கு முக்கியமில்லை என பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? யார்? வேட்பாளர்களாக நிறுத்தப்பட போகின்றார்கள் என்பது குறித்து தற்போது கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சியும் குறித்த விடயம் தொடர்பில் பேசிவருகின்றனர். இந்நிலையில், எமக்கு தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை. முதுகெலும்பு உள்ள ஒருவரே எமக்கு தேவையாக இருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? ஜனநாயகவாதியா? என்பது குறித்து தமக்குப் பிரச்சினையில்லை. நாட்டு மக்களின் மனங்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும். சில நேரங்களில் அவ்வாறு வரும் ஒருவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும் எனவும், அது எமக்கு முக்கியமில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!