கட்டுப்பாடின்றி செயற்படும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும்-ஓமல்பே சோபித தேரர்

தன்னிச்சையாகவும் கட்டுப்பாடு இன்றியும் செயற்படும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

புத்த பகவானின் உயிருள்ள உருவமான தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித தந்தம் (பல்) அவமதிக்கப்படுவதை பௌத்தர்களால் எந்த வகையிலும் தாங்கிக்கொள்ள முடியாது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் பலர் இருக்கின்றனர்

சேபால் அமரசிங்க பௌத்த மதத்தை அவமதிக்கும் நபர்களில் ஒரு நபர் மாத்திரமே. இப்படியான நபர்கள் நாட்டில் பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

யூ டியூப் சமூக ஊடகத்தின் மூலம் தலதா மாளிகை மற்றும் அங்குள்ள புத்தரின் புனித தந்தத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் ஊடகவியலாளரும் சமூக செயற்பட்டாளருமான சேபால் அமரசிங்க அண்மையில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!