சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானிய பிரதமர் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் வீடியோ கிளிப் ஒன்று சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருந்த நிலையில் அது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
    
இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டு இருந்த விளக்கத்தில், இது ஒரு தீர்ப்பு பிழை, சிறிய வீடியோ கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை அகற்றினார். இது தவறு என்று அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்கிறார் என்று தெரிவித்து இருந்தது.
மேலும் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், “அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பிரதமர் நம்புகிறார்.” சீட் பெல்ட் இருக்கும் போது அணியத் தவறினால் £500 வரை அபராதம் விதிக்கப்படும். இவற்றில் இருந்து பொலிஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட மருத்துவ சிக்கல்களுக்கு கார் பயன்படுத்தப்படும் போது சில விதிவிலக்குகள் உள்ளன என தெரிவித்து இருந்தார்.

பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் வெளிவந்த வீடியோ விவகாரம் எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதை விசாரித்து வருகிறோம் என்று லங்காஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீட் பெல்ட் அணியாத ஓட்டுநர்கள் அபராதப் புள்ளிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, சீட் பெல்ட் விதிகளை கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து உள்ளது. 2021 ஆம் ஆண்டில் சாலைகளில் கார்களில் கொல்லப்பட்டவர்களில் சுமார் 30% பேர் சீட் பெல்ட் அணியவில்லை என்று சமீபத்திய போக்குவரத்துத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!