மனநலம் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்க இடமளிக்க முடியாது : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களையும் இணைக்கக் கூடிய வகையில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் வழிகாட்டல்கள் மாகாண சுகாதார அமைச்சு உட்பட்ட அதிகார நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் நான் ஆளுநராக பதவியேற்ற காலத்தில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ரீதியாக ஒருங்கிணைக்க கூடிய நடைமுறை காணப்படாமை அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த செயற்திட்டத்தினை ஒழுங்குபடுத்துவதற்காக சுகாதார அமைச்சின் கீழ் இணைப்பாளராக வைத்தியர் ஒருவரை நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிலர் மனநலம் குன்றியவர்களுக்கு ஏதும் செய்துவிடக் கூடாது அல்லது அவர்களை அப்படியே விட்டு விடலாம் என்ற குறுகிய நோக்கங்களை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் பராமரித்து அவர்களுக்கான சிகிச்சைகள் மற்றும் வழிகாட்டல்கள் மாகாணத்தில் வழங்கப்பட வேண்டுமே அல்லாமல் புறக்கணிப்புக்கு மாகாணத்தில் இடம் வழங்கப்படமாட்டாது.

ஆகவே வடக்கு சுகாதார அமைச்சுக்குரிய அதிகாரங்கள் சில மத்திக்கு ஏற்கனவே சென்ற நிலையில் இருக்கும் அதிகாரங்களை உரிய முறையில் செயல்படுத்தப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!