12,000 சிறார்கள் தொடர்பில் உதவி கோரிய ஒன்ராறியோ மருத்துவமனைகள்!

கனடாவின் ஒன்ராறியோவில் மொத்தம் 12,000 சிறார்கள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக கூறி உதவி கோரியுள்ளனர். மாகாணத்தின் நான்கு முதன்மையான மருத்துவமனைகள் தெரிவிக்கையில், இது மிக நெருக்கடியான சூழல், கண்டிப்பாக மாகாண நிர்வாகம் உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
    
சுவாச நோய்கள், காய்ச்சலால் ஏற்படும் தொடர் வியாதிகள் உட்பட பாதிக்கப்பட்ட சிறார்களால் ரொறன்ரோ, ஹாமில்டன், லண்டன், ஒட்டாவா உட்பட முக்கிய நகரங்களில் பல மருத்துவமனைகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலை தவிர்த்திருக்கலாம், ஆனால் மூன்று நெருக்கடியான மாதங்களில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். அதன் பின்னர் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. 11,789 சிறார்களில் பாதிக்கு மேல் எண்ணிக்கையிலான சிறார்கள், மருத்துவமனை குறிப்பிட்ட காத்திருப்பு காலம் கடந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், 2,332 சிறார்கள் கட்டாயம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனர். தொடர்புடைய நான்கு மருத்துவமனையிலும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க, மாகாணம் முழுவதும் பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!