இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துள்ளார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் ( Bonnie Horbach) இன்று (24.01.2023) யாழ்ப்பாணத்துக்கு சென்றள்ளார்.

இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரான அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!