‘பெரிய அபாயம் காத்திருக்கிறது’ – எலான் மஸ்க் எச்சரிக்கை!

எதிர்கால கலாச்சாரம் அல்லது சமுதாயத்துக்கே பெரிய அபாயம் காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்விட்டரின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க். விடயம் என்னவென்றால், சமீபத்தில் ஜப்பான் பிரதமரான Fumio Kishida, தனது நாடு அழிவின் விளிம்பில் உள்ளதாக எச்சரித்திருந்தார். அதாவது, ஜப்பானில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துவருகிறது. ஆகவே, ஜப்பான் சமூக நிலைகுலைவின் விளிம்பில் இருப்பதாக எச்சரித்திருந்தார் அவர்.
    
ஆக, ஜப்பான் பிரதமரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதத்தில்தான் எலான் மஸ்க் எதிர்கால கலாச்சாரம் அல்லது சமுதாயத்துக்கே பெரிய அபாயம் காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது மக்கள்தொகை வீழ்ச்சியடையுமானால் உலகின் எதிர்காலத்துக்கு அது பெரிய அபாயம் என்னும் அர்த்தத்தில் எலான் மஸ்க் அவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தின் மக்கள்தொகை குறித்து கவலை தெரிவித்துள்ள எலான் மஸ்குக்கு 10 பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!