ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை! – மகிந்த சமரசிங்க

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது. இலங்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சியாளர்கள், புதிய அரசமைப்பு உருவாக்க வேண்டுமென செய்த் அல் ராட் ஹுசைன் பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசமைப்பு உருவாக்குதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றன. இதனிடையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமற் செய்யவேண்டுமென ஜே.வி.பியினர் தெரிவித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்ட அவர், இவை தொடர்பில் சுதந்திர கட்சியின் மத்திய மற்றும் செயற்குழுகள் கூடி இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!