13 I ஒழிக்க முழு ஆதரவு!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஒரே வழியாகும் என்று ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, சட்டத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தால் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.
    
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் 22 ஆவது திருத்தத்தை கொண்டுவந்து 13ஐ இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்றும் இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சரத் எம்.பி மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்புக்கு ஒரு சாபக்கேடான சட்டமாகும் என்றும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஜனாதிபதி தெரிவித்ததைப் போல அதை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தால் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஏனெனில் சிக்கலுக்குரிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஒரே வழியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!