மக்களின் ஆதரவை இழக்கின்றாரா பிரதமர் ட்ரூடோ?

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மேற்கு கனேடிய பகுதிகளில் ட்ரூடோ தொடர்பிலான விமர்சனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
    
வேறும் ஒருவர் பிரதமராக இருந்திருந்தால் தமது மாகாணம் தற்போதைய நிலைமையை விடவும் நல்ல நிலையில் இருந்திருக்கும் என்ன கனேடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற சுமார் 52 வீதமான கனேடியர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான், மானிடோபா, பிரிட்டிஸ் கொலம்பியா போன்ற மாகாணங்களில் டரூடோவிற்கான ஆதரவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 35 முதல் 54 வயது வரையிலான வயதுகளை உடைய கனேடியர்கள் அதிகளவில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!