500 உயிர்களை பலி வாங்கிய போராட்டம்: கைதானவர்களுக்கு மன்னிப்பு!

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு அல்லது தண்டனை குறைக்கப்படும் என ஈரானிய தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா அமினி(22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்று பின் உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    
பெண்கள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததைத் தொடர்ந்து, ஆண்களும் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. அவர்களில் 70 பேர் சிறார்கள் ஆவர்.

மேலும் போராட்டங்கள் தொடர்பாக சுமார் 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய நீதித்துறையின்படி குறைந்தது நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 1979 இஸ்லாமியப் புரட்சியின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பினை அரசியல் மற்றும் மதத் தலைவர் அயத்துல்லா அலி ஹொசெய்னி காமெனி அங்கீகரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் அண்மைய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர். மாநில ஊடக அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட விவரங்களின்படி, இந்த நடவடிக்கை ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான இரட்டை குடிமக்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!