குரங்குகள், மயில்களை கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி!

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள் கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று தெரிவித்துள்ளார்.
    
உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பின் போது, குரங்குகள் அப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிரிட முடியாமல் பயிர்களை நாசம் செய்வது குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், குரங்குகள், மயில்கள், மர அணில்கள் உட்பட பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனவே, அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் பயன்படுத்த விவசாயிகள் சுதந்திரமாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உட்பட அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் , சிக்கலைத் தீர்க்க வேறு வழிகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!