கடன் குறைப்புக்கு சீனா ஒப்புதல் வழங்கவில்லை!

இலங்கைக்கு சீனா ஆதரவைத் தெரிவித்தாலும் நிதி மற்றும் அரசியல் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் பல பில்லியன் டொலர் கடனைக் குறைக்க உதவுமா என்று கூறவில்லை என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் வலியுறுத்தியுள்ளார்.
    
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை அச்சுறுத்தும் கடன் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் ஏனைய முன்னணி பொருளாதாரங்களை வேகமாக நகர்த்துமாறு அவர் கூறியதாக திறைசேரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி 20 நாடுகளின் நிதித் தலைவர்களின் கூட்டத்தின் அங்கமாக, இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வியாழக்கிழமை சந்தித்த போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். துறைமுகம் மற்றும் இதர வசதிகளை நிர்மாணிப்பதற்காக கடனை நீட்டித்ததன் பின்னர், இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநர்களில் ஒருவரான சீனா, சீனா ஆதரவைத் தெரிவித்தாலும் கடனைக் குறைக்க உதவுமா என்று கூறவில்லை.

சர்வதேச நாணய நிதியம் அவசர கடனுக்கான நிபந்தனையாக கடனை குறைப்பை முன்வைத்துள்ள போதும் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்த முன்வந்துள்ளது சீனா, செலுத்த வேண்டிய தொகையை குறைப்பதில் தடுத்தது. ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் சீன நிதியமைச்சரை சந்தித்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியை நாடுவதே கடனில் சிக்கித் தவிக்கும் என்றும் நாட்டுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரே வழி என்றும் செவ்வாய்க்கிழமை அவர் வலியுறுத்தினார். இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீதான தாமதம் சிக்கலை ஏற்படுத்தியதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!