ஜெர்மனியில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

ஜெர்மனி நாட்டில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுவது தொடர்பாக புதிய சட்ட நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் விவசாய துறை அமைச்சர் இந்த புதிய சட்ட நகல் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனியின் விவசாய அமைச்சர் செம் ஒஸ்டமையர் அவர்கள் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெப்ரவரி 28 ஆம் திகதி புதிய ஒரு சட்ட நகலை சமர்ப்பித்திருக்கின்றார்.
    
தற்போது இளைஞர் யுவதிகள் மத்தியில் உணவு பழக்க வழக்கங்கள் சீர்கேடான முறையிலேயே பின்பற்றப்படுகின்றது, அதனை தவிர்க்கும் நோக்கில் சற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சட்ட நகல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இளைஞர் யுவதிகளிடையே போசாக்கு என்ற விடயத்தை கருத்தில் கொண்டு, போசாக்கு அற்ற உணவுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மற்றும் Youtube இணையத்தளங்களில் விளம்பரம் செய்வதற்கு குறிப்பிட்ட நேரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை இவ்வகையான தடைகள் இருக்கும் என்றும் இந்த புதிய சட்ட நகலில் தெரி்விக்கப்பட்டுள்ளது. காலம் தாழ்த்தியாவது இவ்வகையான சட்டம் நாடாளுமன்றத்தில் சம்ர்ப்பிக்கப்பட்டது ஒரு இன்றியமையாத விடயம் என்று பல கட்சிகள் தமது கருத்தில் தெரிவித்திருக்கின்றன. மேலும் இந்த புதிய சட்ட நகலுக்கு ஆதரவாக ஜெர்மனியின் பல கட்சிகள் ஆதரவை தெரிவித்திருக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!