நாளை 390 மில்லியன் டொலர் கிட்டுமா? – இன்று முக்கிய முடிவு.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடனை முறைப்படி இன்றையதினம் அங்கிகரிக்க உள்ளது என்றும் முதல் தவணையாக கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை வழங்கப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
    
நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவாக போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும் டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணையெடுப்பு பொதிக்கு கிடைக்கும் அனுமதி மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் நாட்டுக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்றும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!