விரைவில் பதவி ஏற்பார் இம்ரான்கான்

272 தொகுதிகளில் 117 தொகுதிகளை கைப்பற்றியுள்ள இம்ரான்கான் விரைவில் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. மொத்தம் 342 இடங்கனில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறாகள். இதில் 270 தொகுதிகளில் தற்போது தேர்தல் இடம்பெற்றது..இதில் 136 தொகுதிகளைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்க முடியும்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ- இன்சாப் (பி.டி.ஐ.) அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்துள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும், பிலாவல்பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. மீதியுள்ள 67 தொகுதிகளை இதர சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் கைப்பற்றியுள்ளன.

இம்ரான்கானின் கட்சி பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி விட்டது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைகிறது. விரைவில் அவர் பிரதமராக பதவி ஏற்கிறார்.

4 மாகாண தேர்தல்களில் பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான்கான் கட்சிக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. சிந்து மாகாண பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பலுசிஸ்தானில் அவாமி கூட்டணி கட்சியும் ஆட்சி அமைக்கின்றன. கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் இம்ரான்கான் கட்சி மொத்தம் உள்ள 96 தொகுதிகளில் 66 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் பெருபான்மை கட்சியாக இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ- இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி காணப்படுகின்ற நிலையில் விரைவில் இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!