அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு!

ஜனாதிபதி என்ற வகையில் தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அமைதியான போராட்டம் என்று கூறப்படுவது வன்முறையாக மாறினால் பிரச்சனை ஏற்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத தடுப்புக் காலம் முடிவதற்குள் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற சர்வதேச கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!