கனேடிய டொலரில் பழங்குடியின பெண்களின் உருவம்?

கனேடிய டொலர் நாணயத்தாளில் பழங்குடியின பெண்களின் உருவப்படத்தை பொறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பூர்வகுடிகளான பழங்குடியின பெண்களை கௌரவிக்கும் வகையில் நாணயத் தாள்களில் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. கனேடிய பூர்வீக மகளிர் அமைப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    
20 டொலர் நாணயத்தாளில் பழங்குடியின பெண்களின் உருவங்கள் பொறிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைக்கு கனேடிய மத்திய வங்கி நல்லதொரு பதிலை அளிக்கும் என எதிர்பார்ப்பதாக இந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கியிடம் கோரும் நோக்கில் இதுவரையில் 20000 பேர் மகஜர் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். புகழ்பூத்த பழங்குடியின பெண்களின் உருப்படங்கள் இந்த திட்டத்திற்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!