இன்சுலின் இல்லாமல் இறக்கும் நிலையில் நீரிழிவு நோயாளிகள்! வெளியான தகவல் –

2 மாதங்களுக்கும் மேலாக பல அரச மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் உள்ளிட்ட பல மருந்துகள் கிடைக்காததால் மருத்துவ மனை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மாகாணத்தில் பேராதனை, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பிரதான வைத்தியசாலைகளில் இரண்டு மாதங்களாக கிளினிக் நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

100 மில்லிக்கு குறைவான சிறிய குப்பிகள் 2600 ரூபாவிற்கும் மேல் விற்பளைனயாவதால், பல நோயாளிகளால் அதை வாங்க முடியவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!