ரணில் ஏன் ஆட்சியைப் பொறுப்பேற்றார்..! மகிந்த விளக்கம்

ராஜபக்சர்களைப் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவில்லை, அவர் நாட்டை முன்னேற்றவே ஆட்சியைப் பொறுப்பேற்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கடமையைத் திறம்படச் செய்கின்றார்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். அதன் பெறுபேறாக சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியை இலங்கை பெற்றுள்ளது.
ரணிலின் நல்லெண்ண செயற்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கும். நாட்டுக்கு நன்மை செய்பவர்கள் மீது சிலர் கல்லெறிவார்கள்.

அதேபோல்தான் ரணிலும் விமர்சனங்களை எதிர்கொள்கின்றார். ராஜபக்சக்களும் கடந்த காலங்களில் இவ்வாறான விமர்சனங்களை எதிர்கொண்டார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!