மறைந்த பிரித்தானிய ராணியாரின் இரட்டை வேடம் அம்பலம்!

ஆப்கானிஸ்தானில் போர் களத்திற்கு அனுப்பும் முடிவில் ஹரிக்கு அனுமதி அளித்த ராணியார் வில்லியமிற்கு மறுப்பு தெரிவித்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு நாட்டிற்கு வில்லியம் அனுப்பப்படுவது ஆபத்தானது என ராணியார் கருதியதாக கூறப்படுகிறது. குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ள ஜெனரல் சர் மைக் ஜாக்சன், இளவரசர் ஹரி தமது நூலுக்கு spare என தலைப்பிட்டது பொருத்தந்தான் என குறிப்பிட்டுள்ளார்.
    
மேலும், தமது வருவாயில் பங்குபெறும் தமது பேரப்பிள்ளைகள், தங்கள் கடமையிலும் அவர்கள் தவறக்கூடாது என திட்டவட்டமாக ராணியார் தெரிவித்திருந்துள்ளார்.

ஆனால், வில்லியம் வாரிசுக்கு வாரிசு என்பதால், சிக்கல் மிகப்பெரியது, ஹரியை பொறுத்தமட்டில் அப்படியல்ல, ஆபத்து நேர்ந்தாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது என ராணியார் கூறியுள்ளார்.

இதனையடுத்தே, ஆப்கானிஸ்தானுக்கு வில்லியம் செல்ல வேண்டியதற்கு பதில் ஹரி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் போர் களத்தில் 2007 மற்றும் 2008 வரையிலும் 2012 மற்றும் 2013 வரையிலும் இளவரசர் ஹரி பணியாற்றியுள்ளார்.

இதில் இரண்டாவது முறை சென்ற போது தான் ஹரி Apache ஹெலிகொப்டர் விமானியாக செயல்பட்டுள்ளார். இதே வேளை இளவரசர் வில்லியம் உள்ளூரில் மீட்பு மற்றும் தேடுதல் ஹெலிகொப்டர் பிரிவில் விமானியாக செயல்பட்டுள்ளார்.

இளவரசி மார்கரெட் மரணப்படுக்கையில் இருக்கும் போது ஒருமுறை ராணியார் எலிசபெத் சகோதரியான அவரை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் அப்போதும் இளவரசி மார்கரெட் தமது விருப்பமான வானொலி நிகழ்ச்சியை கேட்பதை நிறுத்தவில்லை எனவும், ராணியாரை அவர் பேச அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!