இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து அறிவிக்கவுள்ள ஜப்பான் மற்றும் இந்தியா

இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்குவது குறித்து ஜப்பான் மற்றும் இந்திய நிதி அமைச்சர்கள் அறிவிக்க உள்ளனர். வோஷிங்டனில் நாளையதினம் (13.04.2023) நடைபெறும் வசந்தகால கூட்டத்துக்கு பின் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, நிதியமைச்சர் மசடோ காண்டா, இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்சின் திறைசேரி இயக்குநர் இம்மானுவேல் மௌலின் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். கடனளிக்கும் நாடுகள் இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்பை நோக்கி நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன.

இதேவேளை இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இணையவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைய வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!