வடகொரியாவின் செயலால் ஜப்பான் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடகொரியா திடீரென்று முன்னெடுத்த ஏவுகணை சோதனையை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல ஜப்பான் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா வீசிய ஏவுகணையானது உள்ளூர் நேரப்படி பகல் 8 மணியளவில் ஹொக்கைடோ தீவு அருகாமையில் விழும் என தெரிவித்துள்ள ஜப்பானிய அரசாங்கம் ஹொக்கைடோவின் வடக்குப் பிரதான தீவில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்புக்கு வருமாறு எச்சரித்தது.
    
கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை எதிர்கொள்ள வடகொரியா ஆயத்தமாக வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் கிம் ஜோங் உன் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே தற்போது ஏவுகணை சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான சமீபத்திய கூட்டு ராணுவப் பயிற்சிகள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்வதாக வடகொரியா விமர்சித்துள்ளது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!