பிறப்பு சான்றிதழில் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கை பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையொன்றை ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!