பிரான்ஸில் மீண்டும் களத்தில் குதித்த மக்கள்!

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புக்காக 12,000 அதிகாரிகள் குவிக்கப்பட உள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள 13 ஆவது நாள் போராட்டம் இதுவாகும். தலைநகர் பரிசில் 100,000 பேர் வரை ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
    
இந்த நிலையில், வன்முறைகளும் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பலத்த எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக இது அமைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து பரிசில் ஜொந்தாமினர் காவல்துறையினர் என மொத்தம் 5,000 அதிகாரிகள் சிவில் மற்றும் சீருடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் 12,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கால் எனவும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!