பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிப்பு

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(04.05.2023) பிரித்தானியாவிற்கு சென்றுள்ளதை தொடர்ந்து பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா விஜயம் செய்துள்ளார் ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!