இலங்கை வந்த வெளிநாட்டுப் பெண்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை

இலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 13 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது,  நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் பாலியல் துன்புறுத்தல்கள், வேறும் வகையிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்களின் பணப்பைகளை பறித்தல், தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் இலக்காகியுள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலாவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகளவான துன்புறுத்தல் சம்பவங்கள் தென் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுற்றுலாத்துறை மூலம் 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!