வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டம் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பில் நடந்த இந்தக் கூட்டத்தில், செயலணியின் உறுப்பினர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

தாம் இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அதிபருக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்த்தாகவும் எனினும் அதற்குப் பதிலளிக்கப்படவில்லை என்றும் வட மாகாண முதமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான அமைக்கப்பட்ட இந்த செயலணியில் வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் உள்ளிட்ட இரண்டு பேர் மாத்திரமே இடம்பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் அமைச்சர்கள், அதிகாரிகள், படை அதிகாரிகளே இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!