அடுத்த வருடத்தில் இருந்து கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி!

அடுத்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவிலான நிதியை ஒதுக்க எதிர்பாரத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

நாம் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல் எமது செலவுகளையும் நாம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்திருக்கலாம். கடந்த பத்து வருடங்களில் நமது செலவினங்கள் தொடர்பில் பார்கின்ற போது, நாம் கல்விக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் சில அரச நிறுவனங்களுக்கே அதிகமாக பணம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்பதை கண்டுகொண்டேன்.

நாட்டுக்கு நல்ல கல்வி முறையொன்று அவசியம். இந்தக் கல்வி முறையில் மிக முக்கியமான விடயம் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவை வழங்குவது. நாம் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். அனைவருக்கும் தேவையான அறிவை வழங்க முடிந்தால், நாட்டின் எதிர்கால வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!