2032 இல் இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம்!

இலங்கையில் முதலாவது அணுமின் நிலையம் ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 2032 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் இலங்கை அணுசக்தி சபை அறிவித்துள்ளது
    
இலங்கை அணுசக்தி சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!