சீனாவில் உளவு பார்த்த அமெரிக்கருக்கு ஆயுத தண்டனை!

சீனாவில் உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஷிங் வான் லியுங் (78) என்பவர் ஹாங்காங்கில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.
    
இவர் மீது சீனாவில் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டில் கைது செய்யபட்டார். இவர் மீதான வழக்கு சீனாவின் சுஸோ நகரில் நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் ஷிங் வானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உக்ரைன்-ரஷ்யா மோதலால் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பு மேலும் விரிசலை அதிகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!