துருக்கியில் சாகச முயற்சி: நெருப்பு கோளமாக மாறிய சிறுவன்!

துருக்கியில் சரக்கு ரயில் ஒன்றின் மீதிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன், மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் மத்திய அனடோலியா பகுதியில் அமைந்துள்ள கிரிக்கலே ரயில் நிலையத்தில் தான் மே 6ம் திகதி குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர் 15 வயதேயான முஹம்மது அலி அல்துண்டல் மற்றும் அவரது நண்பர்கள்.
    
மேலும், பந்தயத்தின் ஒரு பகுதியாக சரக்கு ரயில் பெட்டி ஒன்றின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முஹம்மது ஊக்குவிக்கப்பட்டார். இதனையடுத்து முஹம்மது மற்றும் நண்பர் ஒருவர் ரயில் மீது ஏறியதும், தவறுதலாக மேலே சென்ற ஒரு உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டுள்ளார் முகம்மது.
அடுத்த நொடி மின்னல் வெட்டியது போல, தூக்கி வீசப்பட்டுள்ளார் அந்த மாணவர். உடனடியாக முஹம்மதுவின் நண்பர்கள் அவசர மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவர் பலத்த காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, லேசாக குணமடைந்து வருவதாக கூறப்பட்டாலும், ஆபத்து கட்டத்தை அவர் தாண்டவில்லை என்றே கூறுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!