கனேடிய பிரதமர் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்தமை சிறுபிள்ளைத்தனம்!

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆயுதப் போர் மற்றும் தமிழினப் படுகொலை தொடர்பில் கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமான செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
    
“கனேடிய பிரதமர் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் ஓர் அறிக்கையை முன்வைத்துள்ளார். 14 ஆண்டுகள் கடந்த பின்னும், இனவழிப்பு தொடர்பில் ஒரு நாடு அறிக்கை சமர்ப்பித்துள்ளது எனும் விடயம் ஆராயப்பட வேண்டியது. அதை விட்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கனேடிய பிரதமர் விடுத்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதை விடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் கோட்டாபயவிற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனும் வகையில் அலி சப்ரி செயற்படுகின்றார்.” என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!