“மதுபானம் தொடர்பில் கனடியர்களுக்கு தெளிவில்லை” – ஆய்வில் தகவல்!

மதுபானம் அருந்துவதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் பற்றி கனடிய மக்கள் மத்தியில் சரியான விளக்கமின்மை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய போதைப் பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரிம் நய்மீ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நீண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    
கொள்கை வகுப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களை சேர்ந்தவர்களும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பதானாலும் அது ஓர் சமூக கலாச்சார அங்கமாக காணப்படுவதாலும் மதுப் பழக்கத்தை ஒழிக்க கூடுதல் முனைப்பு காட்டப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
மதுபயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மது அருந்தும் பழக்கத்தினால் ஏழு வகை புற்று நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவது குறித்து 25 வீதமான கனடிய மதுப் பிரியர்களுக்கு தெரியாது என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மதுபான வரியை அதிகரித்தல், எச்சரிக்கை விளம்பரங்கள், போத்தல்களிலேயே எச்சரிக்கை விளம்பரங்கள் உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்டு மது பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!